எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. 5 கட்சிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு.. பொங்கிய மார்க்சிஸ்ட்

 
வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ.7,500 கொடுங்க… மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மாநிலங்களவையின் 12  எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், 5 கட்சிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவையின் 12 எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

பிரியங்கா சதுர்வேதி

இந்த சூழ்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு  மத்திய அரசு அழைப்பு விடுத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. எலமராம் கரீன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக டிசம்பர் 19 தேதியிட்ட உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 வாரங்களுக்கு பிறகும் எதிர்க்கட்சிகளுடன் இது போன்ற பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தாமதப்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

எலமராம் கரீன்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே கூட்டம் நடத்தப்படுவதால், இப்போதும் அரசின் நடவடிக்கை நேர்மையாக இல்லை. இந்த இடைநீக்க விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுதது வருவதை நீங்கள் அறிவீர்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, தலைவரும், அரசாங்கமும் அத்தகையை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே கோரிக்கை விடுத்தன. .இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அரசு நேர்மையாக இருந்தால்,  பேச்சுவார்த்தைக்கு 5 கட்சிகளை மட்டும் அழைக்காமல், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.