கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்.. 41 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை

கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்.. 41 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை

கேரளாவில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 41 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 6ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்.. 41 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை
தேர்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியலில், தற்போது கேபினட் அமைச்சர்களாக இருப்பவர்களில் 8 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் என தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 41 பேர் இடம் பெறவில்லை. அதேசமயம் 38 புதிய முகங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட தொழில் வல்லுநனர்கள் உள்பட இளம் முகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது, கட்சி இளைஞர்களை சென்றடைய உதவும் என்பதோடு கேரள அரசியலின் வழக்கமான தடைகளை உடைக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுகிறது.

கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்.. 41 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை
இந்திய கம்யூனிஸட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தனது கட்சியை சேர்ந்து கேபினட் அமைச்சர்களான பி.திலோதமன், வி.எஸ். சுனில் குமார் மற்றும் கே.ராஜூ ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. தொடர்ந்து 2 முறை தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்ற கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்ததே இதற்கு காரணம்.