அதிமுக செல்வாக்கு தொகுதிகளை கேட்கும் பாஜக! மாவட்டச் செயலாளர்களை சாமாதானப்படுத்திய ஈபிஎஸ்

 
eps eps

அதிமுக - பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Way2News Tamil


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “எஸ்.ஐ.ஆர். பணிகளில் அதிமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை. மாவட்டச் செயலாளர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். தொகுதியில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். அதிருப்தியில் உள்ள கிராம மக்களை சந்தித்து கூட்டணி குறித்து நல்லவிதமான கருத்துகளை தெரிவியுங்கள். கள நிலவரத்தை ஆராய்ந்து வேட்பாளர் பரிந்துரை பட்டியலை நீங்கள் கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகவிற்கு சாதகமான இடங்கள் வழங்கப்பட்டால் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கவேண்டும். அதிமுகவிற்கு சாதகமான இடங்களை பாஜகவுக்கு வழங்க வாய்ப்புள்ளது” என்றார்.