அமித்ஷா வீட்டில் எடப்பாடி பழனிசாமி!

 
ழ் ழ்

kடெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

C P Radhakrishnan standing in the center, wearing a green shawl and holding a pink flower bouquet, surrounded by several men in white traditional attire. Indian national flags are visible in the background, along with a decorative wall and a round table with a floral design. Pink flowers are placed on either side of the group.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி. எஸ் பி வேலுமணி ஆகியோரும் சென்றனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?  - Dinasuvadu

இதனை தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். ஏற்கனவே செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து வருகிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், இன்று மூத்த தலைவர்களுடன் சென்று அமித்ஷாவுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈபிஎஸ் உடன் சென்ற திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் புறப்பட்ட நிலையில் அமித்ஷா உடன் ஈபிஎஸ் தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.