மாநாட்டு மேடையில் தினகரனுக்கு ஷாக் கொடுக்கப்போகும் எடப்பாடி

 
t

மதுரை மாநாட்டு மேடையில் டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று தகவல் பரவுகிறது.

பன்னீர்செல்வம் -பழனிச்சாமி -தினகரன்- சசிகலா ஆகிய நான்கு பேரும் இணைந்த ஒருங்கிணைந்த அதிமுக செயல்படும் என்று பாஜக அரசியல் கணக்கு போட்டு வந்தது.  ஆனால் இணைப்புக்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து விட்டதால் அதில் உறுதியாக நின்று விட்டதால்  பன்னீர்செல்வம் தினகரனை சந்தித்து இருக்கிறார்.  அடுத்த கட்டமாக சசிகலாவை சந்திக்கிறார்.   மூன்று பேரும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.

di

 இந்த நிலையில் திருச்சியில் பன்னீர்செல்வம் மாநாடு நடத்தியதற்கு போட்டியாக மதுரையில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார் எடப்பாடி. அந்த மாநாட்டு மேடையில் தான் தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதாம்.

அமமுக கட்சியின் தென் மண்டல தளபதி தற்போது தினகரனுடன் அதிர்ச்சியில் இருப்பதை அறிந்து கொண்டு,  எடப்பாடி அணியில் இருக்கும் தங்கமணி அவரிடம் பேச்சு நடத்தி இருக்கிறார்.  இந்த பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றியில் முடிந்திருக்கிறது என்கிறார்கள்.  அடுத்த கெட்டது பேச்சுவார்த்தையில் அவரை எப்படியும் சரிகட்டி தங்கள் அணிக்கு கொண்டு வந்து மதுரை மாநாட்டில் மேடையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறாராம் எடப்பாடி. இதன் மூலம்  தெற்கு பக்கத்தில் இருக்கும் தினகரனின் செல்வாக்கை சரித்து விடலாம் என்று கணக்கு போடுகிறாராம் எடப்பாடி .  

அதே நேரம் அதிருப்தியில் இருக்கும் அந்த தளபதியை சரிக்கட்டும் முயற்சியில் இருக்கிறார் தினகரன் என்றும் தகவல்.