"என்எல்சி விவகாரம்.. திமுகவுக்கு கொஞ்சம் கூட கரிசனம் இல்லையே" - விசனப்படும் எடப்பாடி!

 
எடப்பாடி ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்எல்சி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் டிஎம் ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப் பற்றாலும், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியதன் காரணமாக, 1956ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலையமும் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், லாபத்துடன் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் என்எல்சி-யும் ஒன்றாகும். 

Edappadi Palaniswami vs MK Stalin...A look into their journey towards  assembly! | The New Stuff

லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்எல்சி தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசின் சார்பாக சுமார் 5 சதவீத பங்குகளை வாங்கினார். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும், அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும் அதிமுகவுக்கு இருந்த அக்கறையும், கரிசனமும் இந்த திமுக அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது. தற்போது என்எல்சி நிறுவனம் தனது 3ஆவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

NLC India Commissions 130 MW Solar Project in Tamil Nadu's Neyveli - Mercom  India

பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் அமைந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் காணொலி மூலம் என்எல்சி நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப் பகுதிகளில் ரூ75,000 வழங்கப்படும். மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில், 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனம், பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல் அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.  இந்த அறிவிப்பை ஒரு சதவீத மக்கள்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 

NLC India Limited

17.1.2022 அன்று என்எல்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தங்களுடைய சந்தேகத்தை, கேள்வியை எழுப்பியபோது, அதற்கு சரியான பதில் அளிக்காமல் பாதியிலேயே நிர்வாகம் கூட்டத்தை முடித்துக்கொண்டது. அப்போது, அதில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், மக்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல், நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டது. அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும். 

1 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. என்று கூறிய அப்பகு மக்கள், அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்தையும் இழக்கின்ற சூழ்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை சில ஆண்டுகளிலேயே செலவு செய்துவிட்டு, வறுமையின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடிய நிலையை கருத்திற்கொண்டு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

NLC India commissions 500 MW Unit 1 of first lignite-fired power plant |  Business Standard News

1956ம் ஆண்டு துவங்கப்பட்ட என்எல்சி நிறுவத்தின் ஆண்டு வருமானம் இன்று சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 காலக்கட்டத்தில் நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் இன்று பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

தற்போது, என்எல்சி-க்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கெனவே, 2ம் சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள், நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை வழங்கக் கோரியும், என்எல்சி நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனது தலைமையிலான அம்மாவின் அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது புவனகிரி சட்டமன்ற தொகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் உள்ளது.

TN Neyveli Boiler Blast: NLC India to Pay Rs 5 Crore Interim Penalty

எனவே, இச்சட்டத்தைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு உயர் அ காரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அப்போதைய எதிர்கட்சியான திமுக, ஆளும் கட்சியானவுடன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, 17.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், நிர்வாகத்துடன் இணைந்து, கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டமைக்கு, என்எல்சி நிர்வாகத்திற்கும், இந்த திமுக அரசுக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு திமுக அமைச்சர்களுக்கும், அதிமுக சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.