உதயநிதி காட்டிய எடப்பாடி போட்டோ! இந்த பழனிச்சாமி மீசை, வேட்டி, மானம் குறித்து பேசலாமா?என ஆவேசம்

 
u

  நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீச வச்ச ஆம்பளையா இருந்தா,  வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சவால் விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

uu

ஆண்மை ஆராய்ச்சியாளர், உதவாக்கரை பதவி என்றும், டேபிளுக்கு கீழே போய் ஊர்ந்து போய் காலை தேடி மீசையில் மட்டுமல்ல வேட்டியிலும் கூவத்தூர் அழுக்கு பட உருண்டு போய் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவருக்கு மீசை இருந்தால் என்ன வேட்டி விலகினால் என்ன சட்டை கிழிந்தால் என்ன? என்று திமுகவினர் கடுயையாக விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

 கலைஞரின் பேரன் பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன் என்று உதயநிதி,   அதிமுக வேட்பாளரை ஓட்டு கேட்க விடாமல் விரட்டி அடிக்கின்றார்கள்.  இதை தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது .  இந்த விரக்தியில் இங்கு வந்தபோது ஆம்பளையா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  

uus

ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும்.  வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்.  அவருக்கு மீசை இருக்குன்னு தெரியும் . தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போது அந்த மீசை என்ன செய்தது ?பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசி இருக்கின்றீர்கள்;  நீங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவரா?  நீங்க எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் .

அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் அடிமையாக இருக்கின்றார்கள்.  அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். சட்டமன்றம் நிறைவேற்றிய பத்தொன்பது தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் இருக்கின்றார் .  அவங்க பிரச்சனைக்கு மோடிகிட்ட போனாங்க.  வேற மக்கள் பிரச்சனைக்கு போயிருக்கார்களா?  அதிமுக ஆட்சி போனவுடன் இருவரும் சண்டை போடுகின்றார்கள் .  தவறுதலாக என் வண்டியில் ஏறப் போயிட்டாங்க அப்பவே கமலாலயத்துக்கு மட்டும் போய்டாதீங்க என சொன்னேன் .   இப்ப இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்துக்கு போயிட்டு இருக்காங்க. எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தை விட்டு குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்திருக்கின்றார் இபிஎஸ்.  சசிகலாவை ஏமாற்றி ஓபிஎஸ்ஐ ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.

பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை  காட்டி,  தரையில் தவழ்ந்து சசிகலா பாதம் தொட்டு பதவி பெற்ற பழனிச்சாமி மீசை, வேட்டி, மானம் குறித்து பேசலாமா? என்ற கேள்வியை எழுப்பினார்.