பதைபதைப்பில் எடப்பாடி பழனிச்சாமி! மாஜி தனி பாதுகாப்பு அதிகாரி வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள்

 
எ

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது  அவரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்தது டிஎஸ்பி கனகராஜ் இடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 மறைந்த முன்னாள் முதல்வருக்கு நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் கொடநாட்டு எஸ்டேட்டில் சொந்தமான  பங்களா இருந்தது.   கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று இந்த கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.   இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்பட்டவர் கனகராஜ் .  இவர் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஜ்

 இந்த சம்பவத்தில் இன்னொரு குற்றவாளி சயான்.  இவர் குடும்பத்தினர் உடன் கேரளா செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினார்.  இந்த விபத்தில் சயானின் மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர்.  கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராக்களை கையாண்டு வந்த தினேஷ் என்கிற நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   உடல் நலக்குறைவு கோளாறு காரணமாக அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கின்ற நிலையில்,  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.  சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபால் இடமும் விசாரணை நடந்தது.  இதில் கடும் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது என்று ஆவேசப்பட்டார்.

க்

 கொடநாடு விவகாரத்தை முன்வைத்து  அரசியல் காரணங்களுக்காக விசாரணை நடக்கவில்லை.  இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறியவே விசாரணை நடந்து வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார்.   வழக்கின் விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அவரிடம் அவருக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்து டிஎஸ்பி கனகராஜ் இடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை மந்தவெளியில் உள்ள டி .எஸ்.பி. கனகராஜ் வீட்டில் கொடநாடு வழக்கு குறித்து கோவை மாநகர சிபிசிஐடி டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.  இதனால் எடப்பாடிபழனிச்சாமி பதைபதைப்பில் இருப்பதாக தகவல்.