நெஞ்சில் ஈரம் இறக்கம் இல்லாத ஓபிஎஸ் ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியுமா?- ஈபிஎஸ்

 
edappadi palanisamy

14 மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை திமுக கொள்ளையடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமிஅதிமுக இடைக்கால பொதுசெயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தது சென்னை செல்லும் வழியில் வேலூரில் தொண்டர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அழைக்கப்பட்டது. 

Tamil Nadu CM Edappadi K Palaniswami questions DMK move against Speaker-  The New Indian Express

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை சிதைத்துவிடலாம் என திமுக நினைக்கிறது. அதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. திமுக 14 மாதகால ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது. பல சோதனைகளை வென்றது அதிமுக.  ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால் கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்கின்றனர். இது விஞ்ஞான உலகம். இலங்கையில் ஏற்பட்ட சூழல் தமிழகத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக பார்த்துகொள்ளுங்கள். அதிமுக பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து செயல்படுத்துங்கள் 

திமுக வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. இதே நிலை தொடருமானால் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வரும். மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ஊழல் கொள்ளை  நடந்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்” என்று பேசினார்.