அதிமுகவை அழிக்கும் ஓபிஎஸ்க்கு இனி கட்சியில் சேர 1% வாய்ப்பு கூட இல்லை - ஈபிஎஸ்
அதிமுகவை அழிக்கும் ஓபிஎஸ்க்கு இனி கட்சியில் சேர 1% வாய்ப்பு கூட இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா இன்று நடைப்பெற்றது.அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் K.P.முனுசாமி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றிய பின்னர் உறையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “போடிநாயக்கனூர் தொகுதியில் அம்மாவிற்கு எதிராக தேர்தல் வேலைப்பார்த்தவர் ஓபிஎஸ். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாமில்லாதவர், பலமுறை வாய்ப்பு வழங்கினோம் வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அதைப்பயன்படுத்தி அதிமுகவை அழிக்கவே பார்த்தார். அதனால் தான் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ்-ஐ இனி கட்சியில் இணைப்பதற்கு 1% கூட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.