மோடி படத்தை தூக்கிய எடப்பாடி -நாளை என்ன சொல்லப்போகிறது பாஜக?

 
em

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.   இதை அடுத்து டெல்லி தலைமையுடன் தற்போதைய நிலவரத்தை விளக்கி இருக்கிறார் அண்ணாமலை.   தலைமை இதுகுறித்து எடுக்க முடிவை தொடர்ந்து நாளை தமிழக பாஜக தனது முடிவை அறிவிக்க இருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததும் அதிமுகவின் பழனிச்சாமி -பன்னீர்செல்வம் இரண்டு அணிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பாஜக போட்டியிடும் பாஜகவுக்கு இருவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தெரிவித்திருந்தது.  ஆனால் இதை அலட்சியப்படுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அணி சார்பில் வேட்பாளரை அறிவித்துவிட்டார்.  அதன் பின்னர் பன்னீர்செல்வமும் தனது வேட்பாளரை அறிவித்துவிட்டார்.  இதனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று பாஜக திணறி வருகிறது.   ஆனால் பன்னீர்செல்வம் தரப்பு பாஜக போட்டியிடுவதாக இருந்தால் தனது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக அறிவித்திருக்கிறது .

ad

இந்த நிலையில் பாஜகவின் முடிவுக்கு எல்லாம் காத்திருக்காமல் பாஜக தனது முடிவை அறிவிக்காமல் இருக்கும் நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பாஜகவில் முடிவுக்காக அதிமுக காத்திருக்கத்தான் வேண்டும்.   அதில் ஒன்றும் தவறு இல்லை என்று தெரிவித்திருந்தார் . இதில் கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் முடிவுக்கு எல்லாம் காத்திருக்காமல் தேர்தல் பணிமனை திறப்பு விழாவை நடத்திவிட்டார். 

 அதோடு தேர்தல் பணி மனையில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அச்சிடப்பட்டிருந்தது.   அதிமுக பாஜக கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் பெயர்.   முற்போக்கு என்ற வார்த்தையை கூடுதலாக சேர்த்தது பாஜகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.    மேலும் அந்த பேனரில் மோடியின் படம் இடம் பெறவே இல்லை.   அதன் பின்னர் என்ன நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் முற்போக்கு என்ற வார்த்தையை மட்டும் கருப்பு ஸ்டிக்கர் வைத்து மறைத்து விட்டார்கள்.  ஆனாலும் மோடியின் படம் இடம் பெறவில்லை.

 தற்போதைய நிலை குறித்து பாஜக அகில இந்திய தலைவர் ஜே. பி. நட்டா,  உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சந்தோஷ் ஆகியோரிடம் சந்தித்து தமிழக இடைத்தேர்தல் நிலவரம் குறித்து விளக்கி இருக்கிறார்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதை அடுத்து டெல்லி தலைமை இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவை தொடர்ந்து நாளை மூன்றாம் தேதி தமிழக பாஜக தனது முடிவை அறிவிக்கும் என்று தகவல்.