வசமாக சிக்கிய எடப்பாடி! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

 
e

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கி இருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமானவர் எடப்பாடி பழனிச்சாமி .   இவரிடம்  விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது லஞ்ச ஒழிப்புத்துறை.  அதாவது,   எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.   இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

ep

 இந்த குற்றச்சாட்டில் முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும்,  அதனால் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருந்த நிலையில்,  தமிழக அரசு அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது .

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்  எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய குற்றவாளி,  அவரை சிறைக்கு தள்ளியே தீருவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரானவர்களும் திமுகவினரும் சொல்லி வந்தனர்.  குறிப்பாக மு. க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலேயே இதை குறிப்பிட்டு இருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமி என்று பெயரை குறிப்பிடாமல்,  கொடநாடு கொலை வழக்கிற்குக் காரணமானவர்களை உள்ளே தள்ளி நடவடிக்கை எடுப்பது தான் முதல் வேலை என்று சொல்லி இருந்தார். ஆனால் இதில் எடப்பாடி பழனிச்சாமி தண்டிக்கப்படாமல் இருப்பதால்,  திமுகவுடன் அவர் ஒப்பந்த அரசியல் செய்து கொண்டார் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிக்காமல் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி,  தற்போது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் அதிரடியாக சிக்கி இருக்கிறார்  இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அவர் அதிமுகவில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இப்படி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கி இருப்பது கட்சியினரிடையே மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.