எடப்பாடியின் ‘ஆம்பள’பேச்சு! வலுக்கும் மோதல்

 
na

எடப்பாடி பழனிச்சாமியின் ‘ஆம்பள’பேச்சு விவகாரத்தில் எழுந்த மோதல் வலுத்து வருகிறது.  திமுக ஆதரவு நிலை எடுத்த இயக்குநர் நவீனுக்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.  கருணாநிதி, ஸ்டாலின் பேசிய பேச்சுச்களை ஆதாரமாக காட்டி வருகின்றார்கள்.

ap

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தனது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி,  ’’நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தா நேராக வாக்காளர்களை சந்தி.. திராணி இல்ல, தெம்பு இல்ல, எதிர்க்க சக்தி இல்ல.  அண்ணா திமுகவை எதிர்க்க சக்தி கிடையாது.  கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு, ஏழை மக்களை ஆங்காங்கே அழைத்து வந்து, 120 இடத்துல கொட்டகை அமைச்சு அமர வச்சிருக்கீங்க.’’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.

இதற்கு திரைப்பட இயக்குநர் நவீன்,  ’ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?  இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

a

நவீனின் இந்த பதிவுக்கு  பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அப்சரா  கண்டனம் தெரிவித்திருக்கிறார். ’’இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது Raja போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்’’ என்று பதிவிட்டுள்ள அப்சரா, ஒரு பேப்பர் கட்டிங்கையும் பகிர்ந்திருக்கிறார்  .

அந்த பேப்பரில்,  மதுரையில் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு கல்லடி பட்டு தலையில் ரத்தம் முழுகியதை திமுக தலைவர் கருணாநிதி அம்மையாருக்கு மாதவிலக்கு இருந்திருக்கும் என்று சொல்லி தமிழனின் திராவிட பெருமையை தரணிக்கு காட்டினார் என்ற இருக்கிறது.

e

இதற்கு நவீன்,  எடப்பாடியார் மட்டுமல்ல, பொதுமேடைகளில் திரைப்படங்களில் வரும் இது போன்ற வாசகங்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, தங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது தோழர் என்று சொல்ல,


பதிலுக்கு அப்சரா, அதிகாரம் வரும்போது பொறுப்பும் அதற்கு ஏற்பவும் வருகிறது.   அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.  அதிமுகவில் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன.  அதிமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராக எந்த விதமான தரக்குறைவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.  பேசியிருந்தால் கண்டிக்கலாம்.  எடப்பாடி பழனிச்சாமி பேசியதை மு.க.ஸ்டாலினும் பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.