பணம் கொடுத்தால் பதவி - தவெகவில் வெடித்த பூகம்பம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் நகரத் தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் என அம்மாவட்ட் தவெக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப்பட்டதாக வெளியான Chat ஆல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட் அந்த வாட்ஸ் அப் Chat-ல் புஸ்ஸி ஆனந்த் நம்பரும் உள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பண பேரம் நடைபெற்றதாக அதர்ச்சி தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தவெக பதவிக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 19 அணி தலைவர்களுக்கும் அந்தந்த பதவிக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உழைப்பவர்களை விட்டுவிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு பதவி கொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.