அது எச்சமா? சட்டையை கிழித்துக்கொண்டு ஓடி நிக்கும்போது அது தெரியலையா? அர்ஜூன் சம்பத் விளாசல்

 
ச

 ஆளுநர் பதவி பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சமா? சட்டையை கிழித்துக்கொண்டு ஓடி மனு கொடுக்கும் போது அது தெரியவில்லையா? என்று விளாசி எடுத்து இருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

ஷ்

 இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.  அங்கே  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பேசியுள்ளார். 

 அப்போது ,  தூத்துக்குடியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி ,  ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் என்று பேசியது குறித்த கேள்விக்கு ,   ‘’எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும் போது அது தெரியவில்லையா?’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

ட்

 தொடர்ந்து அது குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், ’’ஆளுநரை அவமதித்தால் அரசியல் சாசனத்தை அவமதித்தது போன்ற குற்றம்.  நாலாந்தர பேச்சாளரை விட்டு திட்டுவது திமுகவோட சாட்டர்ஜி . இப்படி பேசுபவர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ச

 ’’நாடார் சமுதாயத்தின் பெயரில் கிறிஸ்தவர்கள் நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து சலுகைகளை கிறிஸ்தவ நாடார் என்ற சாதி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டியவர்,  ’’நாடார்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். மதம் மாறி செல்கின்றவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கூடாது . இது பற்றி விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்’’ என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.