’’என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க... உங்களால் சமாளிக்க முடியாது’’-நடிகர் பாலாஜி ஆவேசம்

 
sb

என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க... உங்களால் சமாளிக்க முடியாது என்று  முதல்வரை டேக் செய்து டுவீட் செய்த நடிகருக்கு, நீ அரசியலுக்கு வா உன்ன எப்படி handle பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் என்று கொதித்தெழுந்துள்ளனர் திமுகவினர்.

ரம்மி விளையாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அதை தடை செய்வதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  அதற்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் முழக்கம் எழுப்புகின்றனர்.  ரம்மி விளையாட்டால் எங்காவது எப்போதாவது ஒரு உயிர் தான் பலியாகிறது.  ஆனால் மதுவால் தினம் தினம் பலர் கெட்டுச் சீரழிகிறார்கள்.  பல விபத்துக்கள் பல படுகொலைகள் நிகழ்கின்றன.  பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன.  அதனால் ரமியை விட மதுவுக்கு எதிராக ஏன் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை?  அதற்கு ஏன் பலரும் குரல் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தார் திரைப்பட இயக்குநர் பேரரசு. 

p

 இந்த நிலையில் திரையுலகில் இருந்து இன்னொரு குரல் ஒலித்து இருக்கிறது.  ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பாலாஜி முருகதாஸ்.  

 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நாலு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.  இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கடந்து கொண்டு டைட்டில் பட்டதை தட்டிச் சென்றார் .  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு . 

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து,   தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.  இது ஏராளமான உயிர்களை அழித்து உள்ளது. ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவிட்டு இருந்தார்.  இவரது பதிவை பார்த்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.   மது கடைகள் இருந்தால் உனக்கென்ன நீ குடிக்காமல் இருக்க வேண்டியதுதானே என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

b

 இதற்கு பதிலடியாக மற்றொரு பதிவிட்ட பாலாஜி முருகதாஸ் , மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறி இருக்கிறார்கள்.  பலர் குடும்பத்தை இழந்து உள்ளனர்.  என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க.  உங்களால் சமாளிக்க முடியாது என்று ஆவேசப்பட்டிருந்தார்.

பாலாஜி முருகதாஸின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.