’’சுப.வீ. கொடுத்ததை மயிராகக்கூட மதிக்கல.. முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகெலும்பு இல்ல..’’

 
ச்


தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,  இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு , தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டப்படுகிறது . போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறை தூண்டுபவர்களையும் விட்டுவிடக்கூடாது.  சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியை எழுப்பி இருந்தார் பிரசாந்த் கிஷோர்.

ஹ்

 அந்த வீடியோவில்,   ‘’நான் அதிகாரத்திற்கு வந்தால் தெறிச்சு ஓடுவான்.  இந்திக்கார பசங்க எல்லாம் அவனே பெட்டிய கட்டிக்கிட்டு ஓடுவான்.  எத்தனை பேரை வச்சு வெளுப்பேன் என்று தெரியாது. கஞ்சா  வச்சிருந்தான் உள்ளே போடு, அபின் வச்சிருந்தான் உள்ளே போடு, பெண்ணை கையை பிடிச்சு இழுத்தான் உள்ளே போடு என்று ஆயிரம் பேரை தூக்கி உள்ள போட்டு , சோறு போடாம அடிச்சு பிச்சி விட்டா. கையெடுத்து கும்பிட்டு அத்தனைபேரும் ஓடிடுவான்.  ஒரே வாரத்துல ஓடிடுவான். ’’ என்று பேசி இருக்கிறார் சீமான்.

ச்ச்

சீமான் பேசியதை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து இருக்கிறார்.  இந்த விவகாரத்தை பிரசாந்து கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இதையடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  இதற்காக முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

ப்

இதற்கு, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம்கார்த்திக்,  ‘’ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காதும் இல்லை; இதயமும் இல்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகெலும்பு என்பது இல்லை என்பதும்!’’என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.


மேலும்,  ‘’எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யச்சொல்லி சுப.வீ. நேரடியாகப் புகார் கொடுத்தும் அதனை மயிராகக்கூட மதிக்காது, ஒற்றை வழக்குப் பதிவுசெய்யத் துப்பற்ற திமுக அரசு, பீகாரி பார்ப்பனன் பிரஷாந்த் கிஷோர் டிவிட் போட்டதும் உடனடியாக அண்ணன் சீமான் மீது வழக்குப் பதிவுசெய்கிறது. ஆரிய அடிமை திமுக!’’என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.