முடிவை மாற்றிக் கொள்கிறாரா அண்ணாமலை? டெல்லியில் 3 நாட்களாக முகாம்
தனது IPS பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக 2021, ஜூலையில் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோவிடம் தோல்வியடைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். 2025, ஏப்ரலில் அண்ணாமலையின் மாநில பாஜக தலைவர் பொறுப்பு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2026, ஜூன் 2ல் பாஜகவிலிருந்து விலகினார் என செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது.
இந்நிலையில் மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருக்கும் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி இருந்தால் ஒரு நாட்களிலேயே சென்னை வந்திருக்கலாம். இதிலிருந்து இன்னும் அவருடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை என தகவல் வருகிறது. ஆனால் அதிருப்தி மற்றும் கட்சியிலிருந்து விலகும் எண்ணத்தில் உள்ள அண்ணாமலையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 35 நிமிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். தேசிய தலைவர்கள் நிதின் நபின் இரண்டு முறை பேச்சுவார்த்தை, RSS முக்கிய நபர்கள் பேச்சுவார்த்தை என 2 நாட்களாக அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனை அடுத்து தன் முடிவை மாற்றிக் கொள்ள இருக்கிறாரா அண்ணாமலை? என்ற சந்தேகம் எழுகிறது. அண்ணாமலை இன்னும் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை என கூறுகிறார்கள் டெல்லி வட்டாரங்கள். தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் RSS மூத்த தலைவர்களிடம் தமிழக பாஜகவில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கூறி இருக்கிறார் அண்ணாமலை. தமிழக பாஜகவில் தவறுகள் மேல் தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. கட்சி வளர்ச்சிக்கு யாரும் பாடுபடவில்லை, என்னால் அங்கு ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்லை, குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் நாம் எப்படி தோற்றம் எதற்காக தோற்றம் எனவும் விளக்கமாக விரிவாகவும் அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறிதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

