தீயாய் வேலை செய்யும் திமுக

 
MKstalin

உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உட்கட்சி தேர்தலுக்கு முன்பாக 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மூன்று நாட்களுக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர்,பகுதி பிரித்து திமுக தலைமைக்கு சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் மறுசீரமைப்பு பணியில் தவறு இருக்கும்பட்சத்தில் கட்சி சார்பற்ற ஒரு குழுவிடம் ஒப்படைத்து ஆய்வுசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் வயது வரம்பு 70ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அதனை 75ஆக நிர்ணயிக்க வேண்டுமென்ற சில மா.செ.க்களின் கோரிக்கை தலைமையால் நிராகரிக்கப்படிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.