திமுக சொந்த செலவில் ஏன் பேனா சின்னம் வைக்கல? - காயத்ரி ரகுராம் விளக்கம்

 
d

அரசு செலவில் அதுவும் மெரினா கடலில் கருணாநிதிக்கு  பேனா நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்று  எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.  திமுக செலவில் செய்ய வேண்டியதுதானே? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதற்கு,  பாஜகவில் இருந்து வெளியேறி திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்திருக்கிறார்.  அதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

g

 மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமானவர் கருணாநிதியின் இலக்கியப் பணிகளை போற்றுகின்ற வகையில் சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்திருக்கிறது. 

 அரசு செலவில் 81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.  கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா சின்னம் அமைக்க  இருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  மக்கள் வரி பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை தேவையா?  அப்படி வைத்தால்  அந்த பேனாவை உடைப்பேன் என்று ஆவேசத்துடன் கூறி இருக்கிறார் சீமான்.  பேனா சிலை வைக்க ரூ.80 கோடி இருக்கு. ஆனா, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தயக்கமா?  என்று கேட்கிறார் சசிகலா.

p

 இப்படி எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் சென்னை மெரினா கடலில்  அமைய இருக்கும் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது .  மெரினாவில் கடலில் பேனா சின்னம் நினைவுச்சின்னம் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கும் மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் . அதனால் பேனா நினைவுச் சின்னத் திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், திமுகவிடம் பணம் இல்லையா என்ன?  எதற்கு அரசு செலவில் இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும் என்று கேட்போருக்கு, பாஜகவில் இருந்து வெளியேறி திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் காயத்ரி ரகுராம்,   ‘’ரெட் ஜெயண்ட் மற்றும் சன் பிக்சர்ஸ் மூலம் 100 கோடி பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு பதிலாக அவர்களால் பேனா கட்ட முடியும். ஆனால் பிரச்சனை இது அரசு இடம், அரசு திட்டம். அவர்கள் அதை சொந்தமாக்க முடியாது. கடற்கரையில் இடத்துக்கு தனியார் நிறுவனத்தால் இடம் பெற முடியாது ஆனால் அரசாங்கத்தால் மட்டுமே முடியும் அதுதான் பிரச்சினை. பின்னர் கடற்கரையில் உள்ள இடம் அனைத்து தலைவர்களின் நினைவகத்திற்கும் இடமாக மாறும், நிரம்பிவிடும். பிரச்சினை பணத்தைப் பற்றியது அல்ல, அது இடத்தைப் பற்றியது’’என்கிறார்.

இதற்கு,  மேடம் கடலில் பேனா வச்சி தான் கருணாநிதி புகழ் பாட  வேண்டுமானால் பேரன் சம்பாத்தியத்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கி வைத்து கொள்ள சொல்லுங்கள், சபரேசன் கிட்ட சொல்லி. அந்த பேன சிலையை அறிவாலயம் வாசலில் வைக்க சொல்லேன்,   ஏன் மக்கள் வரி பணத்துல கடல்ல வைக்க போகணும்,  சபரீசன் கிட்ட சொல்லி. அந்த பேன சிலையை அறிவாலயம் வாசலில் வைக்க சொல்லேன். என் மக்கள் வரி பணத்துல கடல வைக்க போகணும்.  என்று பலரும்  கமெண்ட் அடிக்கிறார்கள்.