அமைச்சர் பதவியை இழக்கத் தயார் - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

 
உதயநிதி ஸ்டாலின்

நீட் விலக்கு கோரி சென்னையில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

உதயநிதி ஸ்டாலின்

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம். இதை 21 தற்கொலைகள் என பேசி வருகிறோம். நான் சொல்கிறேன். இது தற்கொலை அல்ல... கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய பாஜக அரசு, துணை நின்றது அடிமை அதிமுக.. இதை திரும்ப திரும்ப சொல்வேன். நீட் தேர்வை பாஜக ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? ஆளுநர் ரவிக்கு எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு திமிரு? பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா பிசைந்து வைத்த களிமண்ணாகவே அதிமுகவினர் இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

ஆளுநரை பார்த்து கேட்கிறேன். Who are You? You are just the postman. எங்கள் முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது மட்டும்தான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கு தெரியாது. நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த உண்ணாவிரதம் ஆரம்ப கட்டம் தான். நீட் விலக்குக்கோரும் உண்ணாவிரதத்தில் அமைச்சர் என்ற வகையில் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதத்தில் சாமானியனாக இறந்த மாணவர்களின் அண்ணனாக பங்கேற்றேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக தொடர்ந்து மேற்கொள்ளும். மாடு பிடிப்பதற்காக போராடியவர்கள் மாணவர்களின் உயிருக்காக போராட மாட்டோமா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர் நலனுக்காக அமைச்சர் பதவியை இழக்கத் தயார். ” என்றார்.