சீமானின் வீடு வீங்கும், வங்கி கணக்குகள் வீங்கும் - திமுக தாக்கு

 
சே

இதுவரை இல்லாத வெற்றி என்று ஈரோட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் திமுகவினர். ஆனால், எதிர் தரப்பினரோ,   இதை வைத்து தானே இந்த வெற்றி என்று பணம் , பரிசுப் பொருட்கள் கொடுத்து தானே இந்த வெற்றி என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 ஈரோட்டு இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது பணநாயகம் வென்றது என்று கடுமையானது விமர்சித்து வருகின்றனர்.   இது குறித்து திமுகவின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி,  ‘’ஈரோட்டில் பணம் தான் வென்றது என பாசிஸ்டுகள் பல பேர் பதறுகிறார்கள்!  பணத்தைவிட மோசமான  சீமானின் சாதி வெறியையும்.. அண்ணாமலை &Coவின் மதவெறியையும்.. ஈரோட்டு மக்கள் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை!’’என்கிறார்.

சே

 இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான் அருந்ததியர் சாதி குறித்து பேசியது அத்தொகுதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்.

மேலும்,   இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.  அதே நேரம் நாம் தமிழரின் வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியினர் பேசி வரும் நிலையில் அது குறித்து ராஜீவ் காந்தி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

’’நாம் தமிழரின் வாக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்!  ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது!  மாறாக, சீமானின் வீடு வீங்கும், வங்கி கணக்குகள் வீங்கும், தோட்டம் தொறவு என சொத்து பத்து வீங்கும்,  சீமானின் பேச்சை கேட்டு வாய் கோளாறு சண்டை செய்யும் (பாவம்) தம்பிகளின் வழக்குகளும் சேர்த்தே வீங்கும்!’’என்கிறார்.