“விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை” விஜயகாந்த் உருக்கம்!

 

“விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை” விஜயகாந்த் உருக்கம்!

நடிகர் விவேக் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

“விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை” விஜயகாந்த் உருக்கம்!

இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ‘சின்ன கலைவாணர்’ என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை.

தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.