40 தொகுதிகளை கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி- தேமுதிக அதிரடி முடிவு

 
40 தொகுதிகளை கேட்டு பெற தேமுதிக முடிவு 40 தொகுதிகளை கேட்டு பெற தேமுதிக முடிவு

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது நமக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, கூட்டணியின்போது தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என பிரேமலதாவிடம் தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் கூட்டணியில் இருந்தபோது அதிமுகவினர் சரியான ஒத்துழைப்பு தரவில்லை, நம்மை மதிக்கவில்லை. செலவுக்கு சரியாக பணம் கொடுக்க வில்லை. செலவுக்கு சரியாக பணம் கூட கொடுக்கவில்லை. எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேளுங்கள் என்றும் அவர்கள் கூறினர். நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டுக்கொண்டனர்.