நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி... - விஜயகாந்த் அறிவிப்பு..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் .
டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்து விவாதிப்பது, சீட் ஒதுக்கீடு செய்வது என களம் சூடு பிடிக்கத்தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் யாருடனும் கூட்டணி இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதோடு தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தால் கூட எந்த பதவிக்கும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் எனவும், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்ருக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.



