நான் பேசும்போது குறுக்கே பேசாதீங்க! அதிமுக தொண்டரிடம் கோபமடைந்த திண்டுக்கல் சீனிவாசன்

 
srinivasan

காலியாக உள்ள தேனி மாவட்ட செயலர் பதவியை  உடனே நிரப்ப வேண்டும் என்று கூறி கூச்சலிட்ட அதிமுக தொண்டரை நீயே மாவட்ட செயலாளராக  இருந்து கொள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறினர். 

Tamil Nadu making all efforts to increase forest cover: Dindigul Srinivasan

ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் நீட் தேர்வு ரத்து குறித்து திமுகவை சாடி பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அதிமுக தொண்டர் ஒருவர் காலியாக நிரப்பப்படாமல் உள்ள தேனி மாவட்ட அதிமுக செயலாளர்பதவியை உடனே நிரப்ப வேண்டும் என உரக்க கத்தியவாறு கூச்சலிட்டார். இதையடுத்து  அவரை சுற்றி இருந்த அதிமுக தொண்டர்கள் அவரை அமர சொல்லி சத்தமிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதை அடுத்து தனது பேச்சை நிறுத்திய திண்டுக்கல் சீனிவாசன் மாவட்டச் செயலாளர் போட வேண்டுமானால்  நான் பேசி முடித்தவுடன் என்னிடம் கூறுங்கள்,  அதைவிடுத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென டபாக்குன எழுந்து பெரிய மீசை வைத்து கூறினால் என்ன அர்த்தம்  என்றார். நான் பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு பேசினால் எதிரிகள் என்ன நினைப்பார்கள்?  பத்திரிகைகளில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து பேசினார், கூட்டத்தில் குழப்பம் என்று வராதா? என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன், வாட்டசாட்டமாக பெரிய மீசை வைத்துக் கொண்டு இவ்வாறு பேசினால் என்னால் தாங்க முடியுமா? என்றார். மேலும் மாவட்டச் செயலராக நீ யாரை போட சொல்கிறாயோ அவரையே  எடப்பாடி இடம் கூறி போடுகிறேன். நீயே வேண்டுமானாலும் தேனி மாவட்ட செயலாளராக இருந்து கொள் என்றார் திண்டுக்கல் சீனிவாசன். அனைத்து கூட்டத்திலும் தண்ணீர் போட்டவர்கள்  ஒரு குரூப் ஆகவும் தண்ணீர் போடாதவர்கள் ஒரு குரூப்பாகவும் தொல்லை தருகின்றனர். இவர் நடுநிலையாளர் குரூப் என்றார் . மாவட்டச் செயலாளராக சாலையில் போவோரையெல்லாம் அறிவிக்க முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையடுத்து கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது .