பிரதமருக்கு ஆபத்து இல்லை.. பிரதமர் நாற்காலிக்கு தான் ஆபத்து.. திக்விஜய சிங் கிண்டல்

 
பிரதமர் மோடி

உயிருடன் திரும்பி விட்டேன் பிரதமர் மோடி கூறியது குறித்து, பிரதமருக்கு ஆபத்து இல்லை, பிரதமர் நாற்காலிக்கு தான் ஆபத்து என்று திக்விஜய சிங் கிண்டல் செய்துள்ளார்.

பஞ்சாபில் கடந்த சில தினங்களுக்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு பதிண்டா விமான நிலையத்துக்கு சென்று அங்கியிருந்து டெல்லி சென்றார். டெல்லி கிளம்பி செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளிடம், நான் பதிண்டா விமான நிலையத்துக்கு  உயிருடன் வந்தடைந்ததற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றார். மோடியின் இந்த வார்த்தை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சாலையில் 20 நிமிடங்கள் நின்ற மோடி  வாகனம்

உயிருடன் திரும்பி விட்டேன் என்று மோடி தெரிவித்ததை திக்விஜய சிங் கிண்டல் செய்துள்ளார். பேச்சை மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், நான் உயிருடன் திரும்பினேன் ஆனால் 700 விவசாயிகளை உயிருடன் வீடு திரும்ப நான் விடவில்லை. திரும்பி போ மோடி, மோடி டிராமா பேண்ட் கரோ என்ற ஹேஷ் டேக்களை பதிவு செய்து இருந்தார்.

திக்விஜய் சிங்

திக் விஜய் சிங் மற்றொரு பதிவில், முன்பு இந்துக்கள் ஆபத்தில் இருந்தனர். ஆனால் இப்போது பிரதமர் ஆபத்தில் இருக்கிறார். பிரதமருக்கு ஆபத்து இல்லை. பிரதமர் நாற்காலி மட்டுமே ஆபத்தில் உள்ளது. மோடி ஒடிவிட்டார், மோடியும் ஹிட்லரும் ஒன்று என்ற ஹேஷ்டேக்களை பதிவு செய்து இருந்தார்.