கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார்.

மத்திய பிரதேச காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது, கமல் நாத்தின் கறைகளை எந்த சோப்பு பவுடர் போட்டு கழுவினாலும் போகாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியது போன்றவை குறித்து செய்தியாளர்கள் திக்விஜய சிங்கிடம் கேள்வி கேட்டனர்.

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்
கமல் நாத்

செய்தியாளர்களின் கேள்விக்கு திக்விஜய சிங் அளித்த பதிலில் கூறியதாவது: இது ஒரு விசித்திரமான உத்தரவு. அவருக்கு (கமல் நாத்) அறிவுரை வழங்கப்பட்ட பின்னர், அவர் மேலும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. அந்த அறிக்கை அக்டோபர் 13 முதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். என்ன சட்ட ஆலோசனை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சிந்திக்கிறோம். அழுத்தம் கொடுக்கப்படுகிறது, அது சரியல்ல.

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்
சிவ்ராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா

முதலில் சிவ்ராஜின் ரத்தக்களை படிந்த கைகளை கழுவ வேண்டுமா இல்லையா என்பதைத ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கேளுங்கள். சிந்தியா காங்கிரசில் இருந்தபோது, மாண்டசர் விவசாயிகளின் ரத்தத்தால் சிவ்ராஜ் சிங் சவுகானின் கைகள் கறைப்பட்டுள்ளன என்று கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.