அமைச்சராக இருப்பதற்கு பதில் பஸ்ஸாண்டில் வேலை செய்ய வேண்டும்.. பா.ஜ.க. அமைச்சரவை விளாசிய திக்விஜய சிங்

 
திக்விஜய் சிங்

இப்போது ஷாஜஹான் ராமர் பாடல் பாடுவது நல்லது என்று தன்னை கிண்டலடித்த பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை, அவர் அமைச்சராக இருப்பதற்கு பதில் பஸ்ஸாண்டில் வேலை செய்ய வேண்டும் என்று திக்விஜய சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் அண்மையில் டிவிட்டரில், பா.ஜ.க.வின் ராமேஷ்வர் சர்மாவின் வீட்டுக்கு செல்வேன், அவர் வீட்டில் ஒரு மணி நேரம் ராமர் பாடல் பாடி அவருக்கு  நல்ல ஞானம் வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்வேன் என்று பதிவு செய்து இருந்தார். ராமர் பாடல் பாடுவேன் என்று திக்விஜய சிங் கூறியதை மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் செய்தார்.

ராமேஷ்வர் சர்மா

நரோட்டம் மிஸ்ரா டிவிட்டரில், இப்போது ஷாஜஹான் ராமர் பாடல் பாடுவது நல்லது. அதேசமயம், ராமர் பாடல் பாடுவதால் சோனியா காந்தி ஜி அல்லது ராகுல் காந்தி ஜி தனக்கு எதிராக பத்வா அறிவித்து விடக்கூடாது என்பதை திக்விஜய சிங் மனதில் கொள்ள வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். நரோட்டம் மிஸ்ராவின் இந்த டிவிட் திக்விஜய சிங்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

நரோட்டம் மிஸ்ரா

இதற்கு பதிலடியாக திக்விஜய சிங், நரோட்டம் மிஸ்ரா டாப்ராவில் உள்ள பேருந்து நிலையங்களில் நடத்துனர்களிடம் ரூ.20 வசூலித்து வந்தார். இப்போது அவர் கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் வசூல் செய்து வருகிறார். நான் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அமைச்சராக பணியாற்றுவதற்கு பதில் டாப்ராவில் உள்ள பஸ்ஸாண்டில் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.