துரோகிகளை வரலாறு மன்னிக்காது... ஜோதிராதித்ய சிந்தியாவை தாக்கிய திக்விஜய சிங்

 
திக்விஜய் சிங்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமான துரோகிகளை வரலாறு மன்னிக்காது என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தாக்கினார். 

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் பேட்டி ஒன்றில், ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸின் ஆதாயத்தை பெற்றார் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். பணம் விநியோகித்து எங்களின் எம்.எல்.ஏ.க்களையும் தன்னுடன் அழைத்து (பா.ஜ.க.வுக்கு) சென்றார். துரோகிகளை வரலாறு மன்னிக்காது. துரோகிகளை எதிர்கால தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். 

காங்கிரஸ்

ஜான்சி ராணி என்று வரும் போது சிந்தியா குடும்பத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறதா இல்லையா (ஏமாற்றுவதற்காக)? அவர் (அப்போதைய சிந்தியா ஆட்சியாளர்) பானிபட் போரில் இந்து மன்னர்களுக்கு உதவியிருந்தால், அந்த போரில் அகமது ஷா அப்தாலி தோற்றிருப்பார். சிந்தியா நமக்கு துரோகம் செய்யாமல் இருந்திருந்ததால் இன்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கும் என்று தெரிவித்தார். 

ஜோதிராதித்ய சிந்தியா

திக்விஜய சிங்கின் தாக்குதலுக்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா இது தொடர்பாக கூறுகையில், அந்த அளவுக்கு நான் தரம் தாழ விரும்பவில்லை. ஓசாமாவை (பின்லேடன்) ஓசாமாஜி என்று அழைத்தவர்கள், ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்போம் என்று சொன்னவர்கள் யார். யார் துரோகி, யார் துரோகி இல்லை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.