மாதேஷிடம் பேரம் பேசினேனா? சீமான் விளக்கம்

 
ம


 ஆதன் சேனல் மாதேசியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரம் பேசினார்  என்று வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.  இது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.  முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த கேள்வியை எழுப்பினர்.

ண்ட்

 அதற்கு சீமான்,  ‘’தேர்தல் நேரங்களில் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் எங்களை விளம்பரம் செய்கிறோம்.  சில தனியார் தொலைக்காட்சிகளில் பணம் செலுத்தி எங்களின் மேடைப்பேச்சுகளை நேரலையில் போட செய்கிறோம்.  பல சேனல்களில் 12 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய்  கேட்டதால் எங்களால் கொடுக்க முடியவில்லை.  அவர்கள் குறைந்த கட்டணத்திற்கு  செய்வதாக சொன்னார்கள்.  அதனால் சென்றோம்.  மற்றபடி கருத்துக்கணிப்பு எனக்கு சாதகமாக செய்யக்கூடிய ஆள் நான் கிடையாது.  ஏதாவது பைத்தியக்காரன் அப்படி சொல்லிக் கொண்டிருப்பான்’’ என்று ஆவேசப்பட்டார்.

 ஆதன்  சேனலுக்கு மீண்டும் பேட்டி தருவீர்களா என்ற கேள்விக்கு,  ‘’நான் பேட்டி தருவேன் .  ஊடகம் ஒரு முறை விமர்சிக்கும் ஒரு முறை பாராட்டும்.  இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது.  கலைஞர் டிவி பேட்டி கேட்டால் கூட நான் பேட்டி தருவேன்’’ என்றார்.