எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய அண்ணாமலையை களமிறக்கிய பாஜக?

 
s

பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி தனது 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பை பலப்படுத்தி வருகிறார். இந்த இயக்கத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் பாஜகவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு பக்கம் பேச்சுகள் இருந்தாலும், அதிமுக ஆதரவாளர்கள்தான் பரவலாக இதில் இணைகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

BJP vs ADMK : EPS - Annamalai திடீர் பாசம் - கூட்டணி விரிசலை மறைக்கத்தானா ?  | bjp vs admk eps and edappadi palanisamy fight and affection ss show

கடந்த 2021 தேர்தலில் 4 தொகுதிகளில் ஜெயித்திருந்த பாஜக இந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே ஜெயித்திருந்தது. பாஜகவின் வெற்றி பறிபோக எடப்பாடியின் தந்திரமான அரசியல் நகர்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை பாஜக வென்ற தொகுதிகளை கொடுக்காமல் அதற்கு பக்கத்து தொகுதிகளை கொடுத்து ஆட்டத்தை மாற்றினார் எடப்பாடி. இதனால் 22 இடங்களில் பாஜவினர் தோல்வியடைந்தனர். அதிலும் குறிப்பாக அண்ணாமலை தேர்தல் அரசியலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி மிகவும் கவனமாக இருந்தார். இதனால் கடைசி வரை அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் டென்ஷன் ஆன, அண்ணாமலை.. சரி மாநில பாஜகதான் எடப்பாடிக்கு எதிராக சண்டை செய்யாமல் முதுகில் குத்திவிட்டது, தேசிய தலைமையை நம்புவோம் என்று, மத்திய அமைச்சர், கவர்னர் மாதிரியான பதவிக்காக காத்திருந்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
 
இதையடுத்து டெல்லி சென்று முகாமிட்ட அவர், தேசிய தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து, பாஜகவிலிருந்து விலகுவதாக கூறினார். பின்னர் அண்ணாமலை, தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' எனும் அமைப்பை பலப்படுத்துவதாக அறிவித்து, அதற்கான ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார். தொடக்கத்தில் அண்ணாமலையின் நடவடிக்கை, பாஜகவுக்குதான் ஷாக் கொடுத்தது. காரணம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை விரும்பியவர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர். ஆனால், உண்மையில் இது பாஜகவுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் கிடையாது. அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கிருஷ்ணகிரி தொடங்கி சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் வரை அதிமுக பலமாக இருக்கிறது. அண்ணாமலை தனது இயக்கத்தின் உறுப்பினர் பதிவை தொடங்கிய பின்னர், இந்த பகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள் பலரும் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்ததை பார்க்க முடிகிறது. அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தவர்கள், அதற்கான உறுப்பினர் படிவத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வைத்திருக்கிறார்கள். இப்படி வைத்தவர்கள் பலரும் அதிமுகவின் ஆதரவாளர்கள்தான். குறிப்பாக தங்கள் பெற்றோர் அதிமுகவினராக இருக்கும் வீடுகளில், இளைஞர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்திருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, அதிமுக வாக்கு வங்கியை திசை திருப்பி எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன்தான் அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை களமிறங்கி இருக்கிறது அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.