காதில் பூவுடன் வந்த காங்கிரசார்! கர்நாடகத்திலும் ராமர்கோவில்!

 
cஇ

கர்நாடக மாநிலத்திலும் ராமர் கோயில் கட்டப்படும் என்று அம் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.  2023- 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது அவர் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.   

 கர்நாடக மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில் 2023 -24 ஆம் ஆண்டிற்கான  இடைக்கால பட்ஜெட்டினை முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தாக்கல் செய்தார்.

ப்

 பட்ஜெட்டில் கர்நாடகாவில் இருக்கும்  ராம நகராவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார் .  அது மட்டும் அல்லாது அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோயில்கள் மடங்கள் புனரமைப்பதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவித்துள்ளார்.

 இந்த பட்ஜெட் தாக்கல் என்பது முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் காதில் பூ வைத்து பட்ஜெட் நிகழ்வில் பங்கேற்றனர்.  கடந்த பட்ஜெட் தாக்கலின் போது  2018 தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக சொல்லி காதில் பூ வைத்து பட்ஜெட் நிகழ்வில் பங்கேற்றது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.