எடப்பாடியை மறைமுகமாக தாக்க ஸ்டிக்கரை எடுத்தாரா அண்ணாமலை?

 
அ

மத்திய அரசின் திட்டங்கள் தங்களால் தான் வந்தது என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் பிரச்சாரம் செய்து வருவதை முறியடிப்பதற்காக மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் மாவட்டத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருக்கிறார்.

 கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையில்  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.    இந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.   இந்த திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் நடந்தது என்று திமுக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் எம்பிக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.  

எ

 தங்களால் தான் இவையெல்லாம் நடந்தது என்று திமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.  மத்தியிலும் கர்நாடகத்திலும் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கம் செய்ய கர்நாடக பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.   இதுவும் தன்னால்தான் நடந்ததாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்வகுமார் கூறி வருகிறார்.

 மேலும்,  கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரி மாணவர் சேர்க்கை,  கோவை, பொள்ளாச்சி ரயிலில் கூடுதல் பெட்டிகள், கோவை ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்கள் , மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து,  கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்  வலியுறுத்தி இருக்கிறார்.   ஆனால் இவையெல்லாம் தன் சாதனைகள் என்று கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி நடராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். 

 இதேபோன்று தர்மபுரி மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு நூறு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.  இதற்காக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார் இதனை தன் சாதனையாக விளம்பரப்படுத்திக் கொண்டு வருகின்றார் . 

இந்த நிலையில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் மாவட்டத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.  அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் அண்ணாமலை.

ஏ

 இது குறித்து பாஜக நிர்வாகிகள்,   ஒரு பக்கம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி தங்களால் நடந்தது போல் விளம்பரப்படுத்திய வருகின்றன.  அதை மறுபக்கம் தமிழகத்திற்கு மோடி அரசு எதுவும் செய்யாதது போல் பிரச்சாரம் செய்கின்றார்கள்.  இதை முறியடித்து மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு தீவிரமாக செயல்படுமாறு அறிவுறுத்தி இருக்கிறார் அண்ணாமலை என்கிறது என்கிறார்கள்.

இதற்கு,   திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், சின்னதம்பி பெரியதம்பி பகுதியில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏண்ணே... ஸ்டிக்கர் ஒட்டும் திமுக என்று ‘அப்செட்’அண்ணாமலை கிண்டலடித்திருக்கிறாரே? என்று சின்னதம்பி கேட்க,

அதற்கு பெரியதம்பி,  ஆமாம் தம்பி; ஸ்டிக்கர் என்று சொன்னாலே 201ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது நிவாரண உதவிகளுக்கான பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வாகனங்களை அதிமுகவினர் மடக்கிப்பிடித்து தாங்கள்தான் பொருள்களை அனுப்பியதைப் போன்ற தோறத்தை ஏற்படுத்த, அந்த வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் குறியாக இருந்தார்கள்.

சென்னை மாநகர மக்கள் அதை நன்கு அறிவார்கள்.

தன்னை அலட்சியப்படுத்தி, தன்னோடு பிரச்சாரம் செய்ய மறுத்து. தன்னைத் தனிமைப்படுத்தியுள்ள எடப்பாடியையும், அதிமுகவையும் மறைமுகமாகத் தாக்குவதற்காக, அண்ணாமலை ஸ்டிக்கரை பயன்படுத்தி உள்ளார்; அவ்வளவுதான்! என்று சொல்கிறார்.