பிரிந்துகிடக்கும் அதிமுக- சசிகலாவின் பிளான் இதுதான்: திவாகரன்

 
சசிகலாவின் சகோதரர் திவாகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சசிகலாவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் நினைக்கிறார், அதற்கான முயற்சியை எடுத்து வருகிறார், அனைவரும் ஒன்றாக இணைந்தால் தான் அது அதிமுக என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், “ஓபிஎஸ் தரப்பு இனி எடப்பாடி உடன் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தாலும் சசிகலாவை பொருத்தவரை அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் நினைக்கின்றார்கள், அனைவரும் சேர்ந்தால்தான் அது அதிமுக என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள், அதனால் அனைவரிடமிருந்து இடைவெளி விட்டு அனைத்தையும் கவனித்து வருகிறார். அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். அவருடைய முயற்சியும் அதற்காகத்தான் நடந்து வருகிறது. அது விரைவில் வெற்றி பெறும். 

தற்போது இது போன்று பேசுபவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் சுமூகமான முடிவை எடுப்பார்கள். அதற்கான சூழல் தற்போது வந்து கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இது நடக்க வாய்ப்பு உள்ளது. சசிகலாவை பொறுத்தவரை ஒருவரை பார்ப்பதற்கு அனுமதி கொடுத்து விட்டு ஒருவரை பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று இருக்கக் கூடாது என்று நினைத்து எல்லாரும் கூடி வரட்டும் என்று செயல்படுகிறார். சிலவற்றை வெளியே சொல்ல முடியாது, அனைவரையும் ஒன்றாக இணைத்து கூட்டி கழித்து திருமணத்தில் தாலி முடிஞ்சு போடுவதைப் போல் செயல்படுகிறார்.  அதிமுக அப்படியே தான் உள்ளது, எங்கேயும் போகாது.

சசிகலாவுக்கு எதிராக சதி; உண்மையில் ஜெயலலிதா இறந்தது இந்த தேதியில் தான் – திவாகரன்

தமிழ்நாடு அரசின் செயல்பாடு நன்றாக சென்று கொண்டுள்ளது. ஆளுநர் விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது, ஆனால் சுமூகமாக செல்ல வேண்டும். இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கல்வித்துறையில் அரசுக்கும் ஆளுநர்க்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 பேட்ச் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. அவர்கள் பட்டம் வாங்காமல் உள்ளனர். 


திமுக ஆட்சியில் அனைத்துமே நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றல் மிக்கவராக உள்ளார். அங்கே இங்கே சில பிரச்சனைகள் உள்ளது தான் ஆனால் அதை யாராலும் தடுக்க அதை பெரிசு படுத்தி பேசவும் முடியாது. நிர்வாக ரீதியில் ஆங்காங்கே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், மற்றபடி இந்த ஆட்சி சரிதான்” என்று தெரிவித்தார்.