உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அமைச்சரும், 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வார்கள்... தரம் சிங் சைனி

 
தரம் சிங் சைனி

உத்தர பிரதேசத்தில் ஜனவரி 20ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு அமைச்சரும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தரம் சிங் சைனி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.விலிருந்து இதுவரை 7 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 அமைச்சர்கள் என மொத்தம் 10 பேர் பதவி விலகியுள்ளனர். பதவி விலகிய அமைச்சர்களில்  தரம் சிங் சைனியும் ஒருவர். இவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் சந்தித்தார்.  இதனையடுத்து தரம் சிங் சைனி சமாஜ்வாடியில் இணைவது உறுதியாகி விட்டது.

அகிலேஷ் யாதவ்

தரம் சிங் சைனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் சொல்வதை கேட்க யாரும் இல்லை. 140 எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் அமர்ந்து மிரட்டப்பட்ட சமயம். அப்போதுதான் சரியான நேரத்தில் பதில் கிடைக்கும் என்று அனைவரும் முடிவு செய்தனர். தலித்துகள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான மோசமான புறக்கணிப்பு போன்றவை நான் பதவி விலகும் முடிவுக்கு வழிவகுத்தது.

பா.ஜ.க.

இம்மாதம் 20ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு அமைச்சரும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். தரம் சிங் சைனி இந்த தகவலால் உத்தர பிரதேச பா.ஜ.க. கலகத்தில் உள்ளது. மேலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பா.ஜ.க.வினர் வேறு கட்சிக்கு தாவுவது அந்த கட்சியினரின் மன உறுதியை குலைக்கும்.