தமிழக எழுச்சிக் கழகம்- அரசியலில் இறங்கும் தனுஷ்

 
தமிழக எழுச்சிக் கழகம்- அரசியலில் இறங்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் ’தமிழக எழுச்சிக் கழகம்’ என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

நடிகர் தனுஷ்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று, முதலமைச்சரானதையடுத்து, மற்ற நடிகர்களும் அரசியலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனுஷ் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, அப்படி புதிதாக எந்தக் கட்சியையும் எங்கள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. தலைவர் இப்படியான முக்கிய முடிவுகளை எடுக்கிறார் எனில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசி ஊடகங்களிடம் சொல்லாமல் செய்யமாட்டார். அதனால் வெளியில் பரவும் இந்தச் செய்தியில் உண்மை இல்லை, நற்பணி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார். நாங்களும் மக்களுக்கு நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம் என்றனர்.