மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், அம்மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் நம்முடன் வர விரும்புவதாக விவாதங்கள் இருந்ததாக நான் சொன்னேன். ஆனால் எங்கள் கட்சி தலைவர்கள் சிவ சேனாவை ஒதுக்கி வைத்துவிட்டு இதை செய்ய முடியாது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

மேலும் தேசியவாத காங்கிரஸை நம்முடன் இணைத்து கொள்ளலாம் ஆனால் சிவ சேனாவையும் நம்முடன் அணைத்து செல்ல வேண்டும் என கூறினர். இப்போது அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது மாற்றவோ எங்களது நிகழ்ச்சிநிரல் இல்லை. இப்போது விஷங்கள் எப்படி நடக்கிறது, நாம் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறோம். நீண்ட காலத்துக்கு இது (சிவ சேனா அரசு) ஓடும் என நான் நினைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

நான் ஒரு புத்தகம் எழுதுவேன் அதில் என்னவெல்லாம் நிகழ்ந்ததோ (மகாராஷ்டிரா அரசு உருவாக்கம் தொடர்பாக) அனைத்தையும் எழுதுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களை வென்ற போதிலும், சிவ சேனா ஆட்சியில் பங்கு கேட்டதால் ஏற்பட்ட தொடர் விளைவுகளால் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதேசமயம் முன்னாள் பரம எதிரிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து சிவ சேனா ஆட்சியை அமைத்தது.