ஆண், பெண் சரியான நேரத்தில் திருமணம் செய்யாவிட்டால், அவர்கள் பாவம் செய்யக்கூடியக் கூடும்.. இஸ்லாமிய மதகுரு

 
முஸ்லீம் திருமணம்

ஒரு ஆண்  மற்றும் பெண் சரியான நேரத்தில் திருமணம் செய்யாவிட்டால், அவர்கள் பாவம் செய்யக்கூடிய அபாயம் உள்ளது என்று பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு  இஸ்லாமிய மதகுரு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது.  இதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசனை செய்துள்ளதாக தகவல். அதேசமயம் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் திருமண வயது 21

ஜமியத் தாவத் உல் முஸ்லிமீனின் மத குரு இஷாக் கோரா கூறுகையில், மத்திய அரசு இதை ஒரு சட்டமாக்க விரும்பினால், அவர்கள் அனைத்து மதங்களின் மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.  அரசாங்கத்தை விட மத தலைவர்களை பின்பற்றும் மற்றும் கீழ்ப்படியும் நாடு இந்தியா. எந்தவொரு பிரச்சினையிலும் சட்டம் இயற்றுவதற்கு அரசாங்கத்துக்கு முழு உரிமை உள்ளது.ஆனால்  பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்தியதை சட்டப்பூர்வமாக்க அவசரப்படக்கூடாது என்று தெரிவித்தார். 

திருமணம்

தியோபந்த் மதகுரு முப்தி ஆசாத் காஸ்மி கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான அரசு யாருடைய  பேச்சையும் கேட்பதில்லை. அவர்கள் அதை சட்டமாக்க விரும்பினால், அவர்கள் அதை செய்வார்கள். ஆனால் ஒரு ஆண்  மற்றும் பெண் சரியான நேரத்தில் திருமணம் செய்யாவிட்டால், அவர்கள் பாவம் செய்யக்கூடிய அபாயம் உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே அவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.