ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் டெல்லி விசிட்! தமிழக அரசியல் பரபரப்பு

 
r

ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  மூவரின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. 

 ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றிருக்கும் அவர் மூன்று நாள் பயணமாக டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 28ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். 

e

 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்.  அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது.  அதே நேரம் ஓபிஎஸ் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்.  இந்த அரசியல் நெருக்கடியில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.  ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார் என்பது என்கிறது தகவல்.

 முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்கிறார்.  நாளை இரவு எட்டு முப்பது மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.  வரும் 28ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர் சந்தித்து பேச இருக்கிறார்.  இந்த சந்திப்பின்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.   குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் இரவு 8:30 மணிக்கு  சென்னை திரும்ப இருக்கிறார்.

 ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மூவரின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.