உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு அடுத்த அடி.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தாரா சிங் சவுகான்... வாழ்த்திய அகிலேஷ்

 
தாரா சிங் சவுகான்

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தர பிரதேசத்தில் கிழக்கு பகுதியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் தாரா சிங் சவுகான். இவர் 2009ல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யாக 2009 முதல் 2014 வரை இருந்தார்.  2015ல் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவின் தேசிய தலைவராக உயர்ந்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தாரா சிங் சவுகான் அமைச்சராக இருந்தார்.

பா.ஜ.க.

 இந்நிலையில் தாரா சிங் சவுகான் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், நான் அர்ப்பணிப்போடு உழைத்தேன். ஆனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்குமுறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதால் வேதனையந்து ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அகிலேஷ் யாதவ்

தாரா சிங் சவுகான் ராஜினாமா தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், சமூக நீதிக்கான போராட்டத்தின் இடைவிடாத போராளி தாரா சிங் சவுகான் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும். சமாஜ்வாடியும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்றிணைந்து சமத்துவம் மற்றும் சமத்துவம் என்ற இயக்கத்தை உச்சகட்டத்தறிகு எடுத்து செல்லும். பாகுபாட்டை ஒழிப்போம். இது எங்களது கூட்டு தீர்மானம். அனைவருக்கும் மரியாதை-அனைவருக்கும் இடம் என பதிவு செய்து இருந்தார்.