ஓபிஎஸ் தன்னுடைய சுயநலத்திற்காக யாரையும் பலி கொடுப்பார் - சிவி சண்முகம்

 
CV Shanmugam

தன்னுடைய சுயநலத்திற்காக யாரையும் பலி கொடுப்பார் ஓபிஎஸ். அவரை வைத்து கட்சியை உடைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என சிவி சண்முகம் எம்பி தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்! -  News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News  in Tamil | No.1 Online News

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிவி சண்முகம், “ஓ.பி.எஸ். சுயலாபத்திற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார். ஓபிஎஸ் பச்சை துரோகி, தினகரன், சசிகலா உள்ளிட்டவரை பலி கொடுத்தவர் தான் ஓபிஎஸ். தன்னை நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அவரை வைத்து கட்சியை உடைக்க நினைத்தால் அது நடக்காது  தற்போது சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்துகின்றனர். நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கும் போது இது போன்ற கட்டணங்களை உயர்த்தவில்லை, காவல்துறையை வைத்து மிரட்டலாம் என்று நினைக்கின்றனர். நாங்கள் ஜெயிலுக்கு போக தயாராக உள்ளோம். ஜெயிலுக்கு போய் ரொம்ப நாளாகிவிட்டது” எனக் கூறினார்.