அதிமுக கட்சியையும் சின்னத்தையும் முடக்க நினைத்த ஓபிஎஸ் துரோகி- சிவி சண்முகம்

 
CV Shanmugam

தமிழ்நாட்டில் அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொன்முடியை வர சொல்லுடா..! இது ஏவல்துறை..! வில்லங்க பேச்சு..வழக்கில் சிக்கிய  அதிமுக சிவி சண்முகம்.. | Case registered against former minister CV  Shanmugam

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் சொத்து வரி, குடி நீர் கட்டணங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள தமிழக அரசை பொதுமக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் அதிமுகவினர்  ஏராளமானனோர் கலந்து கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்  சட்டத்தை மீறி மேடை அமைத்தும் விளம்பர பதாகைகள் அதிக அளவு அமைத்திருந்ததால்  போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிவி. சண்முகம், “அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. எட்டப்பன்  பன்னீர்செல்வம்,  கட்சியையும் சின்னத்தையும் முடக்க நினைத்த ஓபிஎஸ் அதிமுகவின் துரோகி” எனக் கூறினார்.