சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா! கடிதத்தை ஏற்ற அண்ணாமலை!

 
ச்ப்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் .  அவரது ராஜினாமா கடிதத்தினை ஏற்கிறோம் என்று கூறி இருக்கிறார் தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று 13 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.  அந்த உத்தரவில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக நிர்வாகி சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

ச்ப்ர்

ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக வரும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று பொறுப்பேற்க இருக்கிறார் சிபி ராதாகிருஷ்ணன்.  இதை முன்னிட்டு பாஜகவில் தான் வகித்து வந்த  அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

 இன்று காலையில் தமிழக பாஜக அலுவலகத்திற்குச் சென்ற சிபி ராதாகிருஷ்ணன்,   ஜார்கண்ட் ஆளுநராக பதவி ஏற்பதை அடுத்து தமிழக பாஜகவில் இருந்த பொறுப்பினை ராஜினாமா செய்வதாக சொல்லி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  இதை ஏற்றுக்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சிபி ராதாகிருஷ்ணனை பாஜகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலக்குவதாக அறிவித்துள்ளார்.