எனக்கா ஓட்டு போட்ட.. யோவ்.. பேசிட்டு தான இருக்கேன்... அமைச்சர் பொன்முடியால் பரபரப்பு

 
op

சர்ச்சையும் அமைச்சர் பொன்முடியையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.  அதனால்தான் என்னவோ சர்ச்சை அமைச்சர் என்றே பொன்முடியை அழைக்க தொடங்கி விட்டனர் மக்கள்.

ஓசி பஸ் என்று பெண்களை இழிவு படுத்தி பேசி சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி,  அவர் எங்கே போனாலும் அவரிடம் மக்கள் எந்த கோரிக்கையை முன் வைத்தாலும்,   நீ எனக்கு ஓட்டு போட்டியா,  எனக்காக நீ ஓட்டு போட்ட.. என்று  அவர்களிடம் ஆவேசத்தை காட்டி வருகிறார்.  மக்களை அலட்சியப்படுத்தி வருகிறார். மரக்காணத்தில் நல்ல மருத்துவமனை இல்லை.   செஞ்சி மஸ்தான் மூன்று முறை அமைச்சராக இருந்திருக்கிறார்.  பொன்முடி ஐந்து முறை அமைச்சராக வந்திருக்கிறார். அப்படி இருந்தும் இந்த பகுதிக்கு சரியான நல்ல மருத்துவமனை இல்லை என்று கோரிக்கை வைத்த வாலிபரை பார்த்து நீ எனக்கா ஓட்டு போட்ட என்று கேட்டு பரபரப்பு  ஏற்படுத்தி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி .

nng

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே இருக்கும் எக்கியர் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரைக்கும் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்த 12 குடும்பங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று  நிவாரண காசோலைகளை வழங்கினர் ,

சங்கர் என்பவரின் வீட்டிற்கு சென்று காசோலை வழங்கிய போது,  அங்கே இருந்த மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி ,அமைச்சர் மஸ்தான் ஆகியோர் காசோலை வழங்குங்க என்று அமைச்சர் பொன்முடியிடம் சொன்னதற்கு,  யோவ் பேசிட்டு தானே இருக்கேன்.. என்று ஒருமையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  பின்னர்  மரக்காணம் செல்லன் தெருவில் உயிரிழந்த ஆபிரகாம் வீட்டிற்கு சென்று காசோலை வழங்கி விட்டு திரும்பி வந்து காரில்  ஏற முற்பட்டபோது ,பொதுமக்கள் சிலர் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

man

 அதில் ஒரு வாலிபர்,  செஞ்சி மஸ்தான் ஐயா மூன்று முறை அமைச்சராக வந்திருக்கிறார்.  பொன்முடி ஐயா ஐந்து முறை அமைச்சராக வந்திருக்கிறார் . அப்படி இருந்தும் மரக்காணத்திற்கு ஒரு நல்ல மருத்துவமனை இல்லை .  அவசர சிகிச்சை என்றால் 40 , 50 கிலோ மீட்டர் தாண்டி தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது.   அதனால் இங்கே நல்ல மருத்துவமனை கொண்டு  வர நடவடிக்கை எடுங்கள் என்று கேட்க ,  எனக்கா ஓட்டு போட்டீங்க என்று ஆவேசமாக சொல்லிவிட்டு காரில் புறப்பட்டு இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து நின்று இருக்கிறார்கள்.  இது குறித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.