பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா? எடப்பாடி அவசர ஆலோசனை

 
eஏ

பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

 அண்ணாமலையின் அதிரடியான சில நடவடிக்கைகளால் பாஜகவில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.  அந்த வகையில் காயத்ரி ரகுராமை அடுத்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த நிர்மல் குமார் வெளியேறினார்.  அவர் வெளியேறியதுமே நேராக சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து விட்டார்.   இதை அடுத்து பாஜகவின் செயலாளர் விலகி அதிமுகவில் இணைந்து விட்டார் . அடுத்தடுத்த இந்த அதிரடிகளால் அதிர்ந்து போய் இருக்கிறார் அண்ணாமலை. 

எட்

 இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அவரின் உருவ பொம்மைகளை, படங்களை எரித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து யாரையும் அழைக்கவில்லை . பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.   ஆனாலும் பாஜகவில் இருந்து வெளியேறியர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவர் மீது ஆத்திரத்தை காட்டி அவரது உருவ பொம்மைகளை  பாஜகவினர் எரித்து வருகின்றனர்.  பதிலுக்கு  அண்ணாமலையின் உருவ பொம்மை,  புகைப்படங்களை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அதிமுகவுக்கும் பாஜகவுமான இந்த மோதலை பார்க்கும்போது  இந்த கூட்டணி இப்போதே முறிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தாங்காது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.   சொந்த கட்சியினரை போலவே கூட்டணி கட்சியினரையும் கொஞ்சம் பார்த்து பேசுவதில்லை அண்ணாமலை.  இதனால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? அப்படி தொடர்வதாக இருந்தால் பாஜகவுடனான இந்த சிக்கலில் எந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

 அதிமுக தமிழ் மகன் உசேன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் , சி. வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து முடிவுகள் எடுப்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து  நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார் எடப்பாடி.  இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.