ஆட்சியை கவிழ்க்க சதியா? கூடா நட்பின் விளைவா?

 
s

இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

k

தென் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசிய போது தான் இவ்வாறு ஆவேசப்பட்டு இருக்கிறார்.

இதற்கு, சபாஷ்! சரியாக சொன்னீர்கள் முதலவர் அவர்களே! என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

அவர் மேலும்,  ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்ய ஆட்சியில் இருப்பவர்கள் அல்லது ஆட்சிக்கு துணை நிற்பவர்களால் தான் முடியும் என்ற அடிப்படையில், உங்கள் கூட்டணி கட்சியினரும், சொந்த கட்சியினரும் தான் பல்வேறு சதித் திட்டங்களை  தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் எ‌ன்று நீ‌ங்க‌ள் சந்தேகிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். 

kd

உங்கள் கூட்டணி கட்சிகளான  விசிக,  மனித நேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஹிந்து மதம் குறித்தும், குறிப்பிட்ட சாதியினர் குறித்தும்  ஆங்காங்கே பேசி மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நீங்கள் ஆதங்கப்படுவதிலும், இப்படியெல்லாம்  திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கோபம் கொள்வதிலு‌ம் நியாயம் உள்ளது என்று சொல்லும் நாரயணன்,

என்ன செய்வது? கூடா நட்பு என்று அன்றே உங்கள் தந்தை கூறிய அறிவுரையை நீங்கள் ஏற்காது போனதன் விளைவே இது! என்கிறார்.