திமுக ஆட்சியை கவிழ்க்க சதியா?முதல்வர் ஸ்டாலின் அப்படி சொன்னது ஏன்? வாசன் பரபரப்பு

 
gk

திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னது ஏன்? என்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ஜிகே வாசன்.

தென் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசிய போது,   இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று ஆவேசப்பட்டு கூறினார்.

c

இந்நிலையில்,   தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை வேலூர் மாவட்டத்தில் வேலூர், சத்துவாச்சாரி த இடங்களில் ஏற்றி வைத்தார் கட்சியின் தலைவர் ஜிகே வாசன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.   திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு,  திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லுவது அரசியல் லாபத்திற்காகவும் எதிர்கால ஓட்டுக்காகவும்தான் என்றார்.

அதிமுக -பாஜக மோதல் குறித்த கேள்விக்கு,   மக்கள் நலன் கருதி அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட வேண்டும் .  கூட்டணி கட்சிக்குள்ளே நிர்வாகிகள் மாறுவது சகஜம்.   இதற்கான விமர்சனங்களை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

 ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணபலம், படைபலம் இருந்த போதிலும் அதிமுக 44 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருக்கிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் அதிமுகவுக்கு ஓட்டளிக்க தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  வரலாறு காணாத செலவு செய்து மக்களை பட்டியிலடைத்து அனைத்து வேலை செய்தார்கள்.  ஆனாலும் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள்.    அதே மாதிரி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை இருக்கிறது என்றார்.

அவர் மேலும்,  தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தினமும் நடக்கிறது . பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.