தீவிரவாத நடவடிக்கைகளில் சிக்கியவர்களுடன் பா.ஜ.க.வுக்கு நெருங்கிய தொடர்பு.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

தீவிரவாத நடவடிக்கைகளில் சிக்கியவர்களுடன் பா.ஜ.க.வுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க.வின் தேசியவாத கூற்றுக்கள் போலியானவை என்று காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் 23 நகரங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியது. பா.ஜ.க.வுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வினர் குடிமக்களுக்கு தேசியத்தை எப்படி போதிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

சஞ்சய் நிருபம்

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தவைலர் சஞ்சய் நிருபம் பேசுகையில், உதய்பூர் டெய்லரை (கண்ணையா லால்) கொன்ற முக்கிய குற்றவாளியான ரியாஸ் அட்டாரியும் பா.ஜ.க. உறுப்பினர்தான். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது என தெரிவித்தார்.

 ரஞ்சீத் ரஞ்சன்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்சீத் ரஞ்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், பயங்கரவாதம் போன்ற தீவிரமான தேசிய பிரச்சினைகளில் அரசியல் விளையாடுவதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. பா.ஜ.க.வுக்கும் பயங்கரவாத செயல்களில் சிக்கியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல அம்பலங்கள் ஆகியுள்ளதால் ஆளும் கட்சியிடம் சில நேரடியான கேள்விகளை கேட்கும்படி நம்மை தூண்டுகிறது என தெரிவித்தார்.