உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் - ஆர்.எஸ்.ராஜன் முதல்வருக்கு கடிதம்...

 
உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின்


உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஆர்.எஸ்.ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலினுக்கு  கூடுதல் பொறுப்புகள் வழங்க கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.   திமுக ஆட்சிக்கு வந்த  பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே  உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல் திமுக கூட்டணியில் அதிகம் ஒலித்து வருகிறது.

உதயநிதி, அன்பில் மகேஷ்..

சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும்.. இதுவே நாட்டு மக்களின் விருப்பம் என்று தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.  இது ஒருபுறம் இருக்க நகர்புற உள்ளாட்சித் தேர்தலில்  உதயநிதி மேயர் பதவிக்கு போட்டியிருவார் என்றும்,  அப்பா ஸ்டாலினைப் போன்று இளைஞரணி, மேயர் , அமைச்சர் என படிப்படியாக பொறுப்புகளை வகித்து உயருவார் என்றும் கூறப்பட்டது.

இந்த கோரிக்கைகள்  ஓய்வதற்குள்ளாக , உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முதல்வருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “ முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த பொறுப்புக்கு வந்திருந்திருக்கிறார். தன் இல்லத்திலேயே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்தே வளர்ந்ததால், இருவரது ஆற்றலையும் இந்த இளம் வயதிலேயே ஆழமாக உள்வாங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘’என்னையே டிக்டேட் செய்யும் அளவிற்கு வந்துவிட்டாயா?’’ ஸ்டாலின் Vs உதயநிதி – அனல் பறக்கும் மோதல்

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும். இளம்தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து, சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு எல்லா மக்களும் விரும்பும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவிகொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும்''
எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

ஏற்கெனவே உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்க  கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாகவும், . இதற்காக, மாணவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய இலாகாக்களை உருவாக்கி, அவரிடம் ஒப்படைக்கவும் மேலிடம் திட்டம் தீட்டியுள்ளதாம் கூறப்படுகிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் இருந்து  உள்ளாட்சி பொறுப்புகளை கவனித்துக்கொண்டர்.  அதேபோல் தற்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து , அவரது நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிகிறது.. இதனைக் காரணமாக வைத்தே கட்சியினர்  துணை முதல்வர் கொடி பிடித்து வருவதாக கூறப்படுகிறது..